‘கலக்க போவது யாரு நவீன் கைதா?

'கலக்க போவது யாரு நவீன் கைதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் நவீன். இவர் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்ததாக இவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இவரை விசாரணை செய்ய போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

நவீன் கடந்த 2016ஆம் ஆண்டு திவ்யா என்பவரை பதிவுத்திருமணம் செய்தார். இந்த நிலையில் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய நவீன் முயற்சித்துள்ளார்.

நேற்று மாலை ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நவீனின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முதல் மனைவி திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய போலிசார் விசாரணைக்காக நவீனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருப்பினும் நவீன் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.