ஆன்மிக கேள்வி-பதில்: முயலகனை மிதித்த தட்சிணாமூர்த்திக்கும் நடராஜருக்கும் என்ன தொடர்பு?

Published:

samavedam 1pic e1528681369149 - 2026

கேள்வி:- நடராஜரின் பாதத்தின் கீழ் ஒரு அசுரன் காணப்படுகிறான். அவன் பெயர் என்ன? இதன் உட்பொருள் என்ன? தட்சிணா மூர்த்திக்கும் நடராஜ மூர்த்திக்கும் என்ன தொடர்பு?

பதில்:- நடராஜரின் வலது பாதத்தின் கீழ் உள்ள ராட்சசன் அபஸ்மாரன். இவனுக்கு வேறு சில பெயர்களும் புராணங்களில் காணப்படுகின்றன. கதையின்படி, சிவன் ஆதி பிக்ஷுவாக தாருகாவனத்தில் பிரவேசித்த போது, அவரைப் பற்றி அறியாத சில மந்திரவாதிகள் அவரை வசப்படுத்தி பலியிடுவதற்கு அபிசார ஹோமம் செய்ய முற்பட்டார்கள்.

அந்த சமயத்தில் அக்னி ஹோமத்திலிருந்து அவர்கள் ஸ்ருஷ்டித்த மரணசக்திகள் அக்னியாக, டமருவாக, புலியாக, அபஸ்மார அசுரனாக ஆவிர்பவித்து சிவன் மீது ஏவப்பட்டன. சிவன் அக்னியையும் டமருவையும் கரங்களில் தரித்து, அவற்றை அடக்கினார். வியாக்ராசுரனான புலியை வதைத்து அந்த புலியின் தோலை வஸ்திரமாக அணிந்தார். அபஸ்மார அசுரனைத் தன் பாதத்தின் கீழே மிதித்து நிருத்தியம் செய்தார்.

இந்த கதையில் அகங்கார சக்திகளை பரமேஸ்வரன் அடக்கிய அழகே குறியீடுகளாகக் காணப்படுகின்றன. அபஸ்மாரன் புத்தியைத் தாக்கும் ‘அபஸ்ம்ருதி’ எனப்படும் அசுர சக்தி. இதன் மூலம் புத்தியின் சக்தி குலைகிறது. இந்த அசுர சக்தியை மிதித்து புத்தியை ஞான சைதன்யமாகச் செய்யும் ஞான சொரூபமே சிவன். டமரு, சப்த சக்திக்கும், அக்னி, காந்தி சக்திக்கும் குறியீடுகள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தட்சிணாமூர்த்தி ஞான மயமான சிவ மூர்த்தி. தட்சிணாமூர்த்தியின் மற்றொரு சொரூபமே நடராஜர். நடராஜரை சிதம்பர தட்சிணாமூர்த்தி என்று மந்திர சாஸ்திரம் போற்றுகிறது.

***

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img