அஜித், விஜய் பட நடிகருக்கு ஜோடியாகும் கல்லூரி மாணவி

Mahat act as a hero in Yagan

அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ‘சென்னை 28 இரண்டாம் பாகம், சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களிலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மகத் தற்போது முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு ‘யகன்’ என்று வைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மகத்துக்கு ஜோடியாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நடிக்கவுள்ளார்.

தினேஷ் பார்த்தசாரதி இயக்கும் இப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.