படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஜய் வசந்த் காயம்

‘சென்னை 600018’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது ‘மை டியர் லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் வசந்த் மோதும் ஆக்சன் காட்சி ஒன்று நேற்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதனால் உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜ வசந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் ‘மை டியர் லிசா’ படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது