சென்னை: பிராச்சி மிஸ்ரா மகத்தை மன்னித்து காதலை மீண்டும் தொடர்ந்து விட்டார் போல…! அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த போது மகத் – யாஷிகா காதல் பரபரப்பாக ஓடியது. காதலை முதலில் மறுத்த மகத் பின்னர் ஒப்புக் கொண்டார். காதலை ஒப்புக் கொண்ட வேகத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மகத்.
ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே மகத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் மகத் யாஷிகா காதல் சீன் ஓடியதால்,மகத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக பிராச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அந்த வேகத்தில், என்னவெல்லாமோ சொன்னார். படங்களை டெலிட் செய்தார். பிக் பாஸ் வீட்டில் இருப்பது என் காதலன் அல்ல; அந்த வீட்டுக்குள் நான் அனுப்பி வைத்தது வேறு ஒரு நபரை என்று கூறி ஆதங்கப்பட்டார்.
இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் கூறினார்கள். மகத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள இந்த நேரத்தில் முன்னர் தாம் வெளியிட்ட காதல் முறிவு வீடியோ மற்றும் போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் பிராச்சி. தான் மகத்துடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளார் பிராச்சி.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத் நேராக பிராச்சியை சந்தித்துப் பேசி யாஷிகா மீது ஏற்பட்டது காதல் அல்ல; அது ஒரு நடிப்பு; பிக் பாஸ் வீட்டுக்காக எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் அது என்று ஏதாவது காரணம் கூறி, மன்னிப்பு கேட்டிருப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இப்படித்தான் பல காதல்கள் வீட்டுக்குள் உருவாகின. ஆனால் எதுவுமே அதன் பின்னர் நிலைக்கவில்லை. எல்லாம் அந்த அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றி விடப் பட்ட நிலைக்கு போனது.
தமிழிலும் முதல் சீஸனில் ஆரவ் காதல் பேசப்பட்டது. ஓவியா புகழ் அடைந்தார். ஆனால், அவர் அதன் பின் நடிப்பில் பிஸி ஆனார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை பார்வையாளர்கள் ஏதோ காதல் காவியம் போன என்று வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தற்போது சீசன் 2லும் மகத், யாஷிகா காதல் சற்று நேர பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களிடம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. மகத் விஷயம் எப்படியும் சரியாகிவிடும். ஆனால், யாஷிகாவுக்கும் வெளியே ஒரு காதலர் இருக்கிறார். அவரிடம் எப்படி இந்த ஸ்க்ரிப்ட் கதையை எடுத்து விட்டு, தன் காதலை காப்பாற்றிக் கொள்ளப் போகிறாரோ யாஷிகா என்று இப்போதே பலரும் கவலையின் உச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்!




