இந்து முன்னணியின் சார்பில், வரும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை கட்டுப்பாடுகள், தேவையற்ற கெடுபிடிகள், அரசு சார்பில் தரப்படும் நெருக்கடிகள் இவை குறித்து, நெல்லை மாவட்டத்தில் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், நெல்லை கோட்ட செயலாளர் தங்க மனோகர் உட்பட 600 க்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




