குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவும் நடந்தது
தெலுங்கு ஹீரோ நித்தின் பிப்ரவரி 15-ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் தனது நீண்டகால காதலி ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவும் நடந்தது. மேலும், இவர்களின் திருமணம் வரும் ஏப்ரல் 16-ஆம் தேது அன்று நடைபெறவிருந்தது.
இருப்பினும், கொரோனா வைரஸ் வெடிப்பு தீவிரமாக மாறியதிலிருந்து, நித்தின் குடும்பத்தினர் துபாயில் உள்ள பாலாஸ்ஸோ வெர்சேஸில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். பின்னர், இருவரின் குடும்பங்கள் ஒரே தேதியில் ஹைதராபாத்தில் திருமணம் நடத்த முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நித்தின் மற்றும் ஷாலினியின் ஏப்ரல் திருமணம் நிறுத்தப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.