காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே தங்களை முடக்கி கொண்டனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல திரையுலக பிரபலங்களும் பல வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுய ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, வீட்டில் முடங்கிய நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். அந்த வீடியோவை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Self-isolation and yes Quality time? #QuarantineLife pic.twitter.com/hI9HiWJSWE
— Nayanthara✨ (@NayantharaU) March 22, 2020