லாக் டவுன் காரணமாக சாலைகளில் யாருமில்லை.
கொரோனாவால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்ரவால் நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இந்நிலையில் டிவி.நடிகை ஒருவர் வாக்கிங் சென்று நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளார். பிரபல இந்தி சீரியல் நடிகை ஆஞ்சல் குரானா. ஏராளமான இந்தி தொடர்களில் நடித்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது செல்ல நாய் லியோவுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று தெருநாய்கள், லியோவை விரட்டியபடி வந்தன. சிறிது நேரத்திலேயே ஆஞ்சலையும் லியோவையும் அந்த நாய்கள் சுற்றிவிட்டன. இதனால் பயத்தில் லியோவை தூக்கி வைத்துக் கொண்டார், ஆஞ்சல். உடனே அந்த நாய்கள் ஆஞ்சலை கடித்துவிட்டன.
இருந்தும் அந்த நாய்கள் விடவில்லை. அவரது இடது பக்க இடுப்பு மற்றும் வலது கால் மூட்டில் பலமாகக் கடித்துவிட்டன. சிறிது நேரத்தில் அவை ஓடியதை அடுத்து, மருத்துவமனை சென்று ஊசி போட்டிருக்கிறார் ஆஞ்சல்.
இந்த சம்பவம் பற்றி அவர் கூறும்போது, லாக் டவுன் காரணமாக சாலைகளில் யாருமில்லை. திடீரென்று தெரு நாய்கள் குரைத்தபடி ஓடிவந்தன. லியோவை தூக்கிக் கொண்டேன். அதற்குள் என்னை கடித்துவிட்டன. நல்ல வேளை என் லியோவுக்கு ஒன்றும் ஆகாததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.