உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10 லட்சத்தை தொட்டது.
உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,15,877 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,218 ஆக உள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,12,993 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,543 ஆக உயர்ந்துள்ளது. 72 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்று, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.