டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு திரும்பி வந்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. மேலும் 21 பேர் ஒளிந்து கொண்டு உள்ளார்கள். சல்லடை போட்டுத் தேடி வருகிறோம்… ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி .
கரோனாவின் தாக்குதலால் ஆந்திர அரசாங்கம் எச்சரிக்கை அடைந்துள்ளது. எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஆந்திராவில் கரோனா கேசுகள் மிகவும் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று மாநில முதல்வர் கூறினார்.
டெல்லி சென்று திரும்பியவர்களில் பலருக்கும் கரோனா பரவியுள்ளது என்று புதன்கிழமை அவர் செய்தியார்களோடு நடந்த கூட்டத்தில் கூறினார். இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்திற்காக சென்ற ஆந்திர வாசிகளுக்கு வைரஸ் பரவி உள்ளது என்று கூறி டெல்லி சென்று வந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் தேடி வருவதாக தெரிவித்தார்.
டெல்லி சென்றவர்கள், அவர்களோடு சேர்ந்து பிரயாணம் செய்தவர்களைக் கூட கண்டுபிடித்து அடையாளம் கண்டு வருகிறோம் என்று கூறினார் . வைரஸ் வந்துவிட்டால் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விடும் என்று யாரும் கவலை அடைய தேவையில்லை என்றார் . கரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பு அபாயம் உள்ளது என்றும் முதியோர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிகமாக காட்டும் என்றும் கூறினார். வைரஸ் பரவுவதை பாவமாக பார்க்க வேண்டாம் என்று அவர் மக்களுக்கு விண்ணப்பித்தார். மாநிலத்தில் ஒரேடியாக கரோனா கேசுகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று கூறினார்.
மாநிலத்தில் 87 கரோனா நோயாளிகள் இருக்கும் பட்சத்தில் அதில் 70 கேசுகள் டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனைக்கு சென்று வந்தவர்கள் என்று கூறினார்.
1085 பேர் மாநிலத்தில் இருந்து டெல்லி மத கூட்டத்திற்கு சென்றார்கள் என்று ஜெகன் தெரிவித்தார். 585 பேருக்கு பரிசோதனை செய்தோம். 70 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. மற்றும் 21 பேரை தேடி வருகிறோம் என்றார்.
டெல்லி சென்று வந்தவர்கள், அவர்களோடு கண்டாக்ட் ஆனவர்கள் சுயமாக தாமாகவே 104க்கு போன் செய்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். யாருக்காவது ஆரோக்கியம் சரியாக இல்லை என்றால் வாலன்டியர்களுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார் .
கரோனா 81 சதவிகிதம் கேசுகள் வீடுகளிலேயே இருந்து மருத்துவம் செய்து கொண்டால் குறையும் என்று கூறினார். வெறும் 14 சதவீதம் பேரை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார். மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டபின் பலருக்கு குணமாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.
கரோனாவால் மாநிலத்தின் பொருளாதார நிலை தாக்குதல் அடைந்துள்ளது என்று ஜெகன் குறிப்பிட்டார். அக்குவா துறையும் ஃபுட் மில்ஸ் ,ஆயில் மில்ஸ் அனைவரும் வேலை செய்யலாம் என்றார் .
கரோனா வந்தவர்களை வெறுக்க வேண்டாம். அதனை தப்பாக பார்க்க வேண்டாம் என்று ஜெகன் கேட்டுக்கொண்டார். இந்த விபத்து சமயத்தில் உதவிகரமாக இருக்க வேண்டுமென்று பிரைவேட் மருத்துவமனைகளுக்கு ஜெகன் விண்ணப்பம் செய்தார்.