நைஜீரியா பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமகா எனிமோ , லாகோஸ் மற்றும் அபுஜாவில் ஊரடங்கின் காரணமாக உலகில் பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலை சுத்தமாக நிறுத்தி விட்டதால் வருமானமின்றி தவிக்கிறோம்.
அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது , சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் , நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம். தொழிலை மூடிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று அரசாங்கம் சொன்னால் , நாங்கள் அனைவரும் கீழ்ப்படிவோம், ஏனெனில் யாரும் இறக்க விரும்பவில்லை அனைவரின் பாதுகாப்பு மிக முக்கியம் , என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் நாங்கள் அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருகிறோம். நீங்கள் எங்களை மருத்துவர்களுடன் ஒப்பிட முடியாது. நாங்கள் மருத்துவர்களை விட மேலானவர்கள் ஏனென்றால் மருத்துவர்கள் எங்களைப்போல மக்களுடன் உடல் தொடர்பு கொள்ளவில்லை. என்று அமகா எனிமோ வாதிட்டார்.