அடடா.. ஒரு சுவிட் ஸ்டாலே சுவிட் செய்து சாப்பிடுகிறதே! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

f1351b025c5fe562a86284b3ec6e5039

2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

83dd2238b9da0a87110b511d2b9230140f004bc76a3166c74fff099d85079448

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ‘அல வைக்குந்தாபுராமுலு’ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது.

139acbbc2611a54451c1406a25366081476e11f3f8ef1c3f163256f04f153604

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹிட் ஹீரோயின் பூஜா ஹெக்டே அல்வா கிண்டும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவர் சமைக்கும் ஸ்டைலை கொஞ்சம் நீங்களே பாருங்கள்…

Source: Vellithirai News

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.