
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3374ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் 77 பேர் உயிரிழந்த நிலையில், 267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்ராவில் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 485 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் குணமடைந்துள்ளனர்.
தில்லியில் 445 பேர் பாதிப்பு; 6 பேர் மரணம்; 15 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 306 பேர் பாதிப்பு; 2 பேர் மரணம்; 49 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 200 பேர் பாதிப்பு; 21 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 269 பேர் பாதிப்பு; 7 பேர் மரணம் 32 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 227 பேர் பாதிப்பு; 2 பேர் மரணம் 19 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 161 பேர் பாதிப்பு; ஒருவர் மரணம்; ஒருவர் குணம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 10 பேர் பாதிப்பு;
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேர் பாதிப்பு;
அசாமில் 24 பேர் பாதிப்பு;
பிகாரில் 30 பேர் பாதிப்பு; ; ஒருவர் குணம்



