தனது கவர்ச்சியான் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
மீரா மிதுன் 2017 – ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறையில் நுழைந்தார். இப்படத்தில் இவர் வட சென்னையில் வசிக்கும் பக்கத்துவீட்டுப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்த படமாக , சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் அமைந்தது. இப்படத்தில் இவர் கலையரசனின் நண்பனின் மனைவியாக நடித்தார். பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கைகள் மூலம் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குள்ளானார். மீரா மிதுன் அடிக்கடி தனது கவர்ச்சியான் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
தனது இன்ஸ்டாகிராமில் அவர் பிகினியில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், நீங்கள் எதற்காகவோ கடினமாக உழைக்கிறீர்கள் என்றால் அதை அடையும்போது பெரிதாக உணர்வீர்கள். பாலிவுட்டின் காதலுக்காக என்று அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள மீரா மிதுனின் இந்த வீடியோவுக்கு வழக்கம் போல சிலர் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு தனக்கு தான் எல்லாம் தகுதியும் இருப்பதாக ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் இதற்கு நெட்டிசன்ஸ் மீராவை வறுத்து எடுக்கின்றனர்