
வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வலிமை.
கொரோனா பிரச்னையால் நின்று நின்று துவங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்தது.
இதையடுத்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாய் துவங்கி உள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வலிமை அப்டேட் என கேட்டு வந்த ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகின்றனர்.
நேற்று திடீரென படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என அப்டேட் கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று(செப்., 23) திடீர் சர்ப்ரைஸாக வலிமை படத்தின் கிளிப்ஸ் என்ற பெயரில் டீசர் மாதிரியான கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளனர். ‘
‘நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் வலை தான் எங்கள் உலகம். என பைக்கில் சாகசம் செய்தபடி பின்னணியில் குரல் ஒலிக்க தீ பொறி பறக்க, அனல் தெறிக்க அஜித் என்ட்ரியாவது போன்று முன்னோட்டம் துவங்குகிறது.
”அர்ஜூன் நீ என் ஈகோவை தொட்டுட்ட கெட் ரெடி பார் கேம் என வில்லன் கார்த்திகேயா பேச, அஜித் பைக்கில் அதிவிரைவாக பயணிப்பதும், ”நான் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என அஜித் பேசும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
1.27 நிமிடம் உள்ள இந்த கண்ணோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் பைக் சாகசம் ரசிகர்களுக்கு பெரிய அளவில் விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கிளிப்ஸ் வெளியான ஒரு மணிநேரத்திலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூகவலைதளங்களில் டாப்பில் டிரெண்ட் ஆனது.
ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு பைக்கில் அஜித் தாவும் காட்சி, நான் கேம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என்ற அஜித்தின் வசனம்,கார்த்திகேயா வீராவேசமாக வசனம், பைக் சேஸிங் காட்சிகள் ஆகியவை இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஹைலைட்ஸ் ஆக உள்ளது.
குறிப்பாக ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படத்தில் வரும் காட்சியைப் போல ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு அஜித் பைக்கில் தாவும் காட்சியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இந்த படம் அஜித்துக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்தாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் Glimpse வீடியோ யுடியூப்பில் வெளியாக 2 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
Get ready for the #ValimaiPongal! 🔥
— Boney Kapoor (@BoneyKapoor) September 23, 2021
Here’s presenting the #ValimaiGlimpse featuring #AjithKumar! 😎
➡️ https://t.co/FDVhHAz4yF@BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @SonyMusicSouth #Valimai