ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காத்திருக்கிறோம் -வரட்டும்னு

காத்திருக்கிறோம் ! என்ன தப்பு?

விடியல் வந்ததும்

Good morning சொல்ல…

நான் கொஞ்சம் கூடுதல்.

யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல்

ஆளாய் அலைவேன். இன்று

அகப்பட்டவர்

ஆஸ்கார் ரஹ்மான்

பிரபஞ்சமே வியந்து

பூமி பந்தை விரித்து

பூங்கொத்தாய் உன்

புகழ் கையில் வழங்கியும்

தலை -கால்-தலை

இடம் பெயராமல்

காலைச்சூரியன் பட்ட

கனகபுஷ்பராகமாய்-ஒரு

புன்னகையை மட்டும்

பதித்துவிட்டு அடுத்த

பணிக்குள் விழையும்

உன்னை நானிப்படி

புகழ்கையில் அறிவேன்

நீ…

இசையை கடத்தும்

தீவிரவாதி மட்டுமல்ல,

இசையை கடந்தும்

ஞானி….நீ …. என! இவ்வாறு தனது வாழ்த்துகளை கவிதைகளாக கூறியுள்ளார்.