அவலத்தின் உச்சத்தில் தமிழகம்..!

traffic - 2026

கற்பழிப்பு, கொலை, ஊழல் என்றால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அப்படீன்னு சொல்றாங்க.

அதே இந்த ஹெல்மெட் போடுறது, வண்டி சரியா ஓட்டுறது, அதிக பாரம் ஏத்தாம இருக்கறது, சாலைகளிலே குப்பை போடாம இருக்கறது, பூசணிக்காய் உடைக்காம இருக்கறது எல்லாத்துக்கும் ஏதோ 50 , 100ன்னு அபராதம் போடு அப்படீன்றாங்க.

தண்டனை என்பதே கடுமையா இருந்தால் தானே அது தண்டனை. சும்மா ஒப்புக்கு தடவிக்கொடுத்தால் அது தண்டனையா?

அபராதம் என்பதே சொத்தை வித்து கட்டுவதாக இருந்தால் தானே அது அபராதம். குறைவா இருந்தா முன்னையே அபராதம் கட்டிட்டு அட்வான்ஸ் புக்கிங் பண்ணி தப்பு செய்ய மாட்டாங்க?

இப்போ ஊழல் எடுத்துக்கோங்க. ஊழலுக்கு அரசியல்வியாதிகளை மட்டும் திட்டுறோம். ஆனா  அதுக்கு உதவிய அரசு அதிகாரிகள் அந்த பணத்தை தரும் தொழிலதிபர்கள் அந்த பணத்தை சலவை செய்து தரும் வங்கி அதிகாரிகள் அந்த வழக்கு விசாரணையை மோசமாக நடத்தும் காவல்,சிபிஐ போன்ற துறை அதிகாரிகள் அது நீதிமன்றத்துக்கு வந்தா ஜாமீன் தரும் நீதிபதிகள்

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

என யாரையும் ஏதும் சொல்வதில்லை. என்னாமோ அந்த அரசியல்வியாதி மட்டும் தனியா பணத்தை மூட்டை கட்டி தூக்கிட்டு போயிட்ட மாதிரி. அப்படியே உதவி செய்யாமலே இருந்தாலும் குற்றம் நடக்கும்போது சட்டப்படியான கடமையை செய்யாமல் இருந்தது தவறு தானே?

அடிப்படை பிரச்சினை யார் பொறுப்பாளி என்பது. யாரெல்லாம் கூட்டுகளவாணிகள் என்பது. குற்றவியல் தண்டனை சட்டம் இப்போது குற்றத்திற்கு உதவியவர்களையும் மறைமுகமாக உதவியவர்களையும் தண்டிக்கீறது.

கொலை நடந்தால் அது தெரிந்தும் அவன் கொலை செய்யப்போகிறான் என தெரிந்தும் அதை தடுக்க முயற்சி செய்யாமலோ அல்லது கொலை செய்யப்போகிறேன் என சொன்னபின்பு பணமோ பொருளோ தந்தாலும் அது கொலைக்கு உதவியதாகத்தான் கருதப்படும்.

அது ஏன் எல்லா குற்றங்களுக்கும் வைப்பதில்லை? அதை வைத்தாலே ஏகப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். சாலையிலே குண்டு குழி இருந்தால் அதை போட்ட ஒப்பந்தக்காரர் அதை சரி பார்த்து அனுமதி அளித்த அதிகாரி அதை மேற்பார்வையிட்ட பொறியாளர்  என அதிலே சம்பந்தப்பட்ட ஆட்களை தண்டித்தால் அடுத்து சாலையிலே குண்டுகுழி இருக்குமா இருக்காது

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

ஆனால் நாம் என்ன சொல்கிறோம். சாலையிலே குண்டு குழி இருக்கட்டும் அதுக்கு பதிலா நான் ஹெல்மெட் போடாம ஓட்டினா கண்டுக்காதே! சாலை வசதி மோசமா இருக்கட்டும் அதே மாதிரி நானும் அதிக எடை ஏற்றி வண்டி ஓட்டுறேன் கண்டுக்காதே.

இந்த அதிக எடை ஏற்றுவதால் சாலை பழுதடையும் ஏன்னா சாலை, மேம்பாலம் என்பதே இவ்வளவு எடையுள்ள வண்டிகள் போகலாம் என கணக்கிட்டு அமைப்பதே . அதை விட இந்த பிரேக், திருப்புதல் போன்ற எல்லாம் சரியாக வேலை செய்யாது காரணம் அதுவும் குறிப்பிட்ட எடைக்கு வடிவமைக்கப்பட்டவையே

இப்படியாக நீயும் தப்பு செய் நான் கண்டுக்கல நானும் தப்பு செய்யறேன் நீ கண்டுக்காதே என பேசினால் எப்படி? இப்படியாக நடக்கும் குற்றங்களை சகித்துகொள்ளும் போது  அதற்கு கடும் தண்டனை வேண்டாம் என சொல்லும்போது

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தைகளையும் கொடுமைப்படுத்தல் எல்லாவற்றிக்கும் சரிப்பா என்ன கற்பழிச்சிட்டானா யாரையோ தானே கற்பழிச்சான் எனக்கு என்ன ஆகிவிடுகிறது.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

நான் பெரிய திறமை சாலி ஹெல்மெட் போடாம போனாலும் ஒன்னும் ஆகாது என இருக்கும் போது  மற்ற விஷயங்களிலும் எனக்கு ஒன்னும் ஆகலியே மத்தவன் செத்தா என்ன என ஆகிவிடுகிறது. அப்புறம் அனுபவிக்கும்போது கதறவேண்டியது. அதிலே நேரா ஏ பாயாச மோடியே தான்.

ஏன்னா லோக்கல் கவுன்சிலரை கேட்டா வீட்டுக்கு முழுசா போகமுடியாதுன்னு தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories