அள்ளி விட்டான் புளுகாண்டி… திரு “உ.ஸ்” அவர்களே! அறிவாளியாக துக்ளக் படிப்பீர்!

Published:

udhayanidhi rajini - 2026

கால் பிடித்து காலம் கடத்தியவர் நடிகர் ரஜினி என்று திமுக இளைஞரணி செயலாளர் திரு “உ.ஸ்” ( உதயநிதி ஸ்டாலின்) விமர்சித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் ஆண்டு விழாவில் பேசும்போது முரசொலி பத்திரிக்கை வைத்து இருந்தால் அவரை திமுக காரர் என்பர். ஆனால் துக்ளக் இதழை வைத்திருப்பவரை அறிவாளி என்பார்.

காலம் கெட்டுப் போச்சு, அரசியல் கெட்டுப் போச்சு, சமுதாயம் கெட்டுப் போச்சு என கூறியிருக்கிறார்.

இதை விமர்சிக்கும் வகையில் திரு உ.ஸ் அவர்கள், முதல்வர்ன்னா முத்தமிழ் அறிஞர்; தமிழர்ன்னா புரட்சித் தலைவர்; தைரியலட்சுமின்னா அம்மா என்று கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி, தலை சுற்றி நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தும் , பகுத்தறியும் சுயமரியாதை காரன். திமுக காரன்; நான் திமுக காரன் பொங்கல் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

thuglaq stalin2 - 2026
thuglaq stalin1 - 2026

என்னுடைய கேள்வி என்னவென்றால், திரு உஸ்அவர்களே, உங்கள் தந்தையார் திமுக தலைவர் திரு”முகஸ் “அவர்கள், நானும்” துக்ளக் வாசகர்” என்று சொல்கிறாரே, பொன் விழா மலருக்கு வாழ்த்து செய்தி எல்லாம் அனுப்பி இருக்கிறாரே, உங்கள் தந்தையாரை எந்த ரகத்தில் சேர்ப்பது?

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அவர் பகுத்தறிவாளர் அல்லது அறிவாளியா அல்லது துண்டு சீட்டில் எழுதியும், அதை கூட ஒழுங்காக படிக்க முடியாத நிலைக்கு யார் காரணம்?

துக்ளக் வாசகராக இருந்தும் இப்படி பழமொழிகளை மாற்றி மாற்றி பேசுவதற்கு யார் காரணம் இது குறித்தெல்லாம் திரு உஸ் விளக்குவாரா? வயதானவர்கள் எல்லாம் பேரணிக்கு வரவேண்டாம்,

கால் நூற்றாண்டாக காலம் கடத்தியவர் என்று ரஜினியை கூறுவதுபோல தன்னுடைய தகப்பனார் முகஸ் அவர்களுக்கு எதிரான கருத்தை வஞ்சப்புகழ்ச்சி அணி போல திரு உஸ் தெரிவிக்கிறார். “அள்ளி விட்டான் புளுகாண்டி “போல
அறிக்கை விட வேண்டாம் திரு உ.ஸ் அவர்களே !!

நீங்கள் அறிவாளியாக “துக்ளக் ” படியுங்கள்.

  • ராம.ரவிக்குமார், (இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்)

Related articles

Recent articles

spot_img