குடும்பத்துடன் பொங்கல் விழா!சொந்த ஊரில் முதல்வர்!

தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
cm 1 - 2026

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 14ம் தேதி சேலம் வந்தார். நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில், தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்.

அதன்பின், அவரது குடும்பத்துக்கு சொந்தமான முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்றார்.

பின், அங்கு நடந்த கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் கண்டுகளித்தார்.

நேற்று மாலையில் கார் மூலம் கோவை சென்று, பின் சென்னைக்கு விமானத்தில் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.