நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 பேரது ஆதரவு குறைவாகப் பெற்று தோல்வி அடைந்த நிலையில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது!
கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்ப்பாக 105 வாக்குகளும் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.
இதை அடுத்து, கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இழுபறியும் குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது.
இதனிடையே ’கர்நாடகாவை மீண்டும் ஒளிமயமாக்குவோம்’. என்று கர்நாடக மாநில பாஜக ட்வீட் வெளியிட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி!
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலையான, செயலாற்றும் ஆட்சியை தருவோம் என மக்களுக்கு உறுதி அளிக்கிறோம் என்று டிவிட் வெளியிட்டது பாஜக.
It’s the victory of people of Karnataka.
It’s the end of an era of corrupt & unholy alliance.
We promise a stable & able governance to the people of Karnataka.
Together we will make Karnataka prosperous again ✌????
— BJP Karnataka (@BJP4Karnataka) July 23, 2019