
கோவில் சிலைகளின் தாக்குதலுக்கு பின்னால் பிகே வியூகம்… ஜெகன் உத்தரவு…. – தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு.
ஆந்திராவில் தற்போது நடந்து வரும் கோவில் சிலைகளின் சேதப்படுத்தும் சம்பவங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் மீது அரசாங்கம் பல விசாரணைகளை செய்து வருகிறது. சிலைகள் மீது தாக்குதல் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக டிஜிபி சவாங் அடிக்கடி கூறி வருகிறார்.
ஆனால் கோவில்கள் தாக்குதல் சம்பவங்களுக்கு இதுதான் காரணம் என்று அரசாங்கம் கூற இயலாமல் உள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்பி சுதாகர் ரெட்டி சிலைகள் உடைப்புக்கான காரணத்தை குறித்து பேசிய விமர்சனங்கள் பரபரப்பாக மாறியுள்ளன.
ஆந்திராவில் நடக்கும் சிலை உடைப்புகளுக்குப் பின்னால் அரசியல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர் உள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் டாக்டர் என்பி சுதாகர் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் வியூகத்தால் ஜெகன் அளித்த உத்தரவின்படி அவருடைய அட்வைசர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி தலைமையில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன என்று சுதாகர் ரெட்டி அதிர்ச்சி விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் சங்கராந்தி அன்று தெலுங்கு தேசம் கட்சி அதிகாரப் பிரதிநிதி சுதாகர் ரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் வெறுப்புப் பார்வையை திசை திருப்புவதற்கு கோவில் சிலைகளின் தாக்குதலுக்கு உட்படுகிறார்கள் என்று சுதாகர் ரெட்டி தெரிவித்தார். கோவில் சிலையை சேதப்படுத்துவதின் பின்னால் அரசியல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர் மறைந்துள்ளார் என்றார். சிலைகள் உடைப்பு ஜெகனின் உத்தரவுபடி அரசாங்க அறிவுரையாளர் ராமகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடக்கின்றது என்று குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியின் ஒத்துழைப்பு இருப்பதால்தான் போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரத்தை வகிப்பது இல்லை என்று சுதாகர் ரெட்டி விமர்சித்தார். அந்தர்வேதியில் கோவில் தேரை எரித்தார்கள். விஜயவாடாவில் துர்கா கோவிலின் வெள்ளி சிங்கங்கள் திருட்டு போயின.
ராம தீர்த்தத்தில் ராமரின் தலையை வெட்டினார்கள். இன்னும் விக்கிரகங்களை மீது வரிசையாக தாக்குதல்கள் நடந்து வந்தாலும் அரசாங்கம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று சுதாகர் ரெட்டி வினா எழுப்பினார்.
புதிதாக செவ்வாயன்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் என்டிஆர் மற்றும் எர்ரம் நாயுடு சிலைகளின் காலையும் சேதப்படுத்தி உள்ளார்கள். இவற்றின் பின்னால் அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் வியூகம் இருக்கிறது என்று சுதாகர் ரெட்டி குற்றம் சுமத்தினார்.
விரைவில் ஒய்எஸ்ஆர் விக்ரகங்களை சேதப்படுத்தி அந்த குற்றத்தையும் தெலுகு தேசத்தின் மீது சுமத்துவதற்கு சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று கூறினார்.
அண்மையில் ஜெகனை சந்தித்த பிரசாந்த் கிஷோர், சலசலப்புகளையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதற்கு வியூகம் அமைத்து சதித் திட்டம் தீட்டியுள்ளார் என்று கூறினார்.
ஜகன் மீது வழக்கு விசாரணைகள், கட்சித் தலைவர்களின் ஊழல், அக்கிரமங்கள்… இவற்றில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே இதுபோன்ற சதித் திட்டங்களை தீட்டுகிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.