
மதங்களை இழிவுபடுத்தி விமர்சனம் காக்கிநாடா பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி கைது.
ஆந்திரப் பிரதேசத்தில் கோவில்களின் மீது தாக்குதல் குறித்து அரசியல் புயல் வீசி வருகிறது. இந்த தருணத்தில் மதங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் விதமாக விமர்சனம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்து கடவுளரின் விக்கிரகங்கள் எல்லாம் வெறும் பிதற்றல் என்று பிரச்சாரம் செய்த காக்கிநாடாவைச் சேர்ந்த பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
கோயில் சிலைகளை மீது தானே தாக்குதல் நடத்தியதாகவும் தானே சேதப்படுத்த செய்ததாகவும் பெங்களூரு காசிப் யூடியூப் சேனலில் பிரவீன் செய்த போஸ்ட் வைரலானது. ஆனால் அவர் பேசிய வீடியோக்கள் எல்லாம் மிகவும் பழமையானது என்று தெரிகிறது.
குண்டூரில் வசிக்கும் சத்தியநாராயணா செய்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் பாஸ்டர் பிரவீன் சக்கரவர்த்தியை கைது செய்தார்கள். மதங்களிடையே பகையைத் தூண்டும்படியாக அவர் பதிவிட்ட போஸ்ட்கள் இருக்கின்றன என்று போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
“பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் காகினாடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர். இதற்கு முன்பு அவர் வெளியிட்ட யூடியுப் வீடியோக்களில் பிற மதங்களின் மன உணர்ச்சிகளை நோகச்செய்யும் படி விமர்சனம் செய்தார்… அவருடைய பேச்சுக்களால் மதங்களிடையே சச்சரவுகள் தலையெடுக்கும் வாய்ப்பு உள்ளது…
அவருடைய விமர்சனங்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் அரஸ்ட் செய்தோம். பிற மதங்களை இழிவு படுத்தினால் பார்த்து சும்மா இருக்க மாட்டோம்” என்று டிஜி சுனில் குமார் தெரிவித்தார்.
கோவில்களை மீது தாக்குதல் நடத்திய 180 வழக்குகளில் 337 பேரை கைது செய்துள்ளோம் என்று டிஜிபி கௌதம் சவாங் குறிப்பிட்டார். ராமதீர்த்தம் பிரதான கோவிலில் தாக்குதல் நடந்துள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் ஆனால் அதற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது உள்ள கோவிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஒரு நாள் முன்பு தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
போலீசாரை குல, மதங்களோடு முடிச்சு போடுவதை என் 35 ஆண்டு சர்வீசில் எப்போதும் பார்க்கவில்லை என்று கூறி வேதனை தெரிவித்தார்.