
தமிழகத்தில் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பதை யொட்டி, மாணவர்களுக்கு தலா இரண்டு வகையான மாத்திரைகள் அதாவது மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 19-ம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ளது.
பள்ளிகள் திறப்பதை யொட்டி, மாணவர்களுக்கு தலா இரண்டு வகையான மாத்திரைகள் அதாவது மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ம் தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தலா ஒரு பள்ளிக்கு ரூ 500 ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்ச்சி வழங்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.