
மதுரையில், விக்கிரமங்கலம் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம், கோவில்பட்டி, நரியம்பட்டி, அரசமரத்துபட்டி, பானா மூப்பன்பட்டி, எரவார்பட்டி, மேல பெருமாள்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மலையூர், கீழப்பட்டி, முதலைக்குளம் உள்பட சுமார் 20 கிராம மக்கள் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், வார சந்தை, ஊராட்சி அலுவலகம், கால்நடை மருந்தகம் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு வருகின்றனர்
இவர்கள் மோட்டர் சைக்கிள் மற்றும் பேருந்தில் வருகின்றனர் இங்குள்ள மதுரை ரோடு சோழவந்தான் ரோடு உசிலம்பட்டி ரோடு பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆகிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் ரோடு குறைவாக உள்ளது
வரக்கூடிய மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தக்கூடிய அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டில் பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் நேரம் விரயமாகி, பொதுமக்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராம பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம், காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறைகள் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து சீராக செல்வதற்கு நடவடிக்கை துரிதமாக எடுக்க இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- ரவிச்சந்திரன், மதுரை