December 6, 2025, 11:53 AM
26.8 C
Chennai

ரூ.30 லட்சத்துக்கு அல்லாடினேன்… சீட் இல்லை! பேர் மட்டும் பாரதியார் பல்கலை!

எனது பெயர் தீபா! பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வென்று சுமார் 30 ஆராய்ச்சி கட்டுரைகளுடன் பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கு 2016-ல் விண்ணப்பித்தேன்…!!

இந்த துறையில் எனது ஆராய்ச்சி பங்களிப்பு உலக தரத்தில் 30 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளதால், கண்டிப்பாக எனக்கு கிடைக்கும் என்று விண்ணப்பம் செய்தேன்..!!

பாரதியின் பெயர் கொண்ட பல்கலைக்கழகம் என் விண்ணப்பத்தை பார்த்தது (விண்ணப்ப படிவம் எண் : BU72010A1), நான் விண்ணப்பம் செய்த என்னை துறையில் ஒருவர் (துறை தலைவர் என்று சொல்லி கொண்டார்) தொடர்பு கொண்டார்.

(விண்ணப்ப படிவத்தில் கொடுத்து உள்ள மொபைல் எண்ணில்).. எடுத்த எடுப்பில் நீ அப்ளை பண்ணி இருக்க.. ஆனா இப்போ 30 லட்சம் முதல் 40 வரை ரேட் போகுது BCக்கு… நீ ரெடி பண்ண முடியும் என்றால் சொல்லு. நான் உனக்கு உதவுறேன் என்றார்.

அவளோ பணத்துக்கு நான் எங்கே போவேன் சார்.. 30 ஆராய்ச்சி கட்டுரை இருக்கு சார், இளம் விஞ்ஞானி அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கேன் சார் என்று சொல்ல… அவர் எதையும் காதில் வாங்காமல், யோசிச்சு முடிவு பண்ணி இன்னிக்கு ராத்திரிக்குள்ள சொல்லுங்க என்று இணைப்பை துண்டித்தார்.

இது என்ன உலகமடா என்று தலையில் அடித்து கொள்ள 13 நாட்கள் கழித்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது..சென்றேன்…!!

ஏன் தான்  சென்றேன் என்று ஆகிவிட்டது… ஒருவரும் என்னை கேள்வி கேக்க வேண்டும் என்று கேட்க வில்லை… என்னை வெறுப்பெத்தவே சில கேள்விகள்…!!
அவற்றுள் சில கேள்விகள்..!!

1. நீ எல்லாம் வெளிநாட்டில் வேளைக்கு போகாம எதுக்கு இங்க வந்த…
2. 30 ஆராய்ச்சி கட்டுரை வைச்சு என்ன நாக்கு வழிக்கவா முடியும்?
3. தனியார் கல்லூரிகள் எல்லாம் போகலையா ?
4. கல்யாணம் ஆகிடுச்சா… இந்த வேலைய வைச்சு எவ்ளோ சம்பாரிப்ப..

மனம் நொந்து வெளியே வந்தேன். நான் கஷ்டப்பட்டு செய்த ஆராய்ச்சிகள் எனக்கு எந்த பலனும் கொடுக்க வில்லை. பணம் மட்டுமே இங்கே பேசும் பொருள்… அதை நான் கொடுக்க மாட்டேன் என்றால். வெளிநாடு போய் வேலை பாரு என்று நக்கல் செய்கிறது இந்த சமூகம்…!!

வருத்ததுடன் வந்தேன், நேர்முக தேர்வு முடிவுகள் வந்தது. பாரதியார் பெயர் வைத்து அந்த இணையம் சொன்னது, நீ தகுதி இல்லாதவன் என்றும், முனைவர் உசா (Usha Singaravelu) என்பவர் வெறும் 4 ஆராய்ச்சி கட்டுரைகளுடன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார் என்றும் தெரிந்து மனம் நொந்து கொண்டேன்!!

அன்று ஏதோ உலகமே என்னை பார்த்து சிரித்தது போல் இருந்தது…!! பணம் மட்டுமே மூலதனம் என்றால் இப்படி தேர்வாகும் பேராசிரியர்கள் எப்படி திறன் வாய்ந்த முனைவர்களை உருவாக்க முடியும்?

என் அழுகைகள் வேலை இல்லாமல் அலைய அவர்கள் சொன்ன வார்த்தைகள் என்னை கிழிக்க தற்பொழுது டென்மார்க் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ளேன்…!! நான் பிறந்த மண் கேவலம் பணம் இல்லாத காரணத்தால் என்னை துரத்தியது…

இன்று செய்திகளில் வரும் பாரதியார் பல்கலைக்கழக முறைகேடுகளில் பாதிக்க பட்ட ஒரு அப்பாவி தமிழன் நான்… இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்ப வில்லை…காரணம் அரசு தான் இங்கே துணைவேந்தர் பணிக்கு 12 கோடி லஞ்சம் வாங்க அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…!!

தகுதி இல்லை என்றாலும் கூச்சமே இல்லாமல் பணம் கொடுக்க முந்தி கொண்டு சேர ஆட்கள் இருக்கிறார்கள்…!!

இனியாவது அரசு 2016-ல் சேர்க்க பட்ட அணைத்து உதவி பேராசிரியர்களுடன் (முனைவர் உஷா அவர்களையும் சோர்த்து) அனைவரையும் தகுதி நீக்கம் செய்து, அவர்களை எந்த கல்லூரியிலும் வேலைவாய்ப்புக்கு அனுமதிக்காமல் புதிதாக இளம் விஞ்ஞானிகளை பணியமர்த்த வேண்டும்….!!

இதை படிப்பவர்கள் தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்…! நாளை உங்கள் மகளோ மகனோ உங்கள் பேரனோ பேத்தியோ அவர்களிடம் படிக்கலாம்…
நாளைய தமிழகத்தை கட்டமைக்க போகும் இந்த கல்வி முறை முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த பதிவு.

இந்த பதிவு யாரையும் துன்புறுத்துமானால் என்னை மன்னிக்கவும்… ஆனால் கிராம புற பகுதிகளில் இருந்து வந்த என்னை போன்றோர் இந்த மண்ணிற்கு எங்கள் திறமையை இந்த மண்ணிற்கு சமர்ப்பணம் செய்ய பணம் தடையாய் உள்ளது…!! என்னை போன்ற எளிமையாய் உள்ளரால் கண்டிப்பாக இதை உடைக்க முடியாது!! உங்களை போன்றோர் எனக்கு இந்த விஷயத்தில் தோள் கொடுத்தால் மட்டுமே இது சாத்தியம்…!!

நன்றி…
கண்ணீருடன்
தீபா!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories