குளத்து மண்ணைக் கொட்டி, சாலையை ரொப்பி… தென்காசி – நெல்லை சாலையின் அவலம்!

அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்களின் சார்பாக நன்றி நன்றி என சமுகவலைத்தளங்களில் வரும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.

திருநெல்வேலி தென்காசி சாலையில் தார்சாலை அமைகா ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒப்பந்தம் இன்னும் விடவில்லை அதற்கான பணியும் ஆரம்பிக்கபடவில்லை

திருநெல்வேலி தென்காசி சாலையை சரி செய்ய சொல்லி பொது மக்களும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கை ஏற்று நெடுஞ்சாலை துறை மூலம் திருநெல்வேலியிருந்து பெரிய பெரிய பள்ளங்களை சிரிய அளவில் தற்போது ஒட்டுப்போடும் பணியை செய்வதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார்.

3.5கோடிக்கும் ஒதுக்கீடு வேலைக்கும் இந்த வேலைக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார். அந்த வேலை ஒப்பந்தகாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் என்றார்

குளத்து மண்களை வெட்டி மண்சாலை அமைத்து சாலையில்பயணம் செய்யும் பொதுமக்களின் கண்களில் மண்ணை துவிய மாவட்ட நிர்வாகத்துக்கும், அதற்கான ஒப்பத்தம் எடுத்த ஒப்பந்தகாரருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்களின் சார்பாக நன்றி நன்றி என சமுகவலைத்தளங்களில் வரும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.

செய்தி படம்: குறிச்சி சுலைமான்