December 6, 2025, 4:51 AM
24.9 C
Chennai

சுப்பாவீ.,க்கு அப்பாவி.,யின் கடிதம்! ஐயா நூல் ஆராய்ச்சி செய்ங்க… பூநூல் ஆராய்ச்சி வேணாம்!

suba veerapandian - 2025

ஓர்அப்பாவியின் கடிதம்
அய்யா சுப.வீ அவர்களுக்கு

“புத்தக நூல் ஆராய்ச்சி போதும்
பூநூல் ஆராய்ச்சி வேண்டாம் ”

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் திருமிகு சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு
வணக்கம்.
தாங்கள் பாஜக சகோதரர் KTராகவன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் என் குறித்தும் எழுதியதை படித்தேன்.
நன்றிகள் பல.
தாங்கள் நாத்திக கொள்கையில் பிடிப்பு கொண்டு -திமுக கட்சியின் தோழமையோடு அவர்கள் மேடை மட்டுமல்ல – பல மேடைகளில் மட்டுமல்ல – தொலைகாட்சி ஊடகங்களில் பேசி வருகிறீர்கள்.

ராம ரவி பாவம் ஒரு அப்பாவி அவர் நம் பிள்ளை. கே.டி.ராகவன் போல இல்லை என்று குறிப்பிட்டு தங்களுடைய பிராமண வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
ஏன் உங்களுடைய சிந்தனையை நேர்மறையாக செலுத்தாமல் வெறுப்புணர்ச்சியை விதைக்கிறீர்கள்.

தாங்கள் குறிப்பிடும் தந்தை பெரியார்- நாங்கள் அப்படி குறிப்பிடுவது இல்லை – ஏன் எனில் எங்களை – தமிழர்களை காட்டுமிராண்டி என அழைத்தவர் .

பல கேள்விகளை தங்களிடம் உங்கள் அப்பாவி ராம ரவி முன்வைக்கிறேன். தங்களிடம் பதில் வரும் என்ற நம்பிக்கையோடு

1. நாத்திகம் பேசி பேசி நிறைவாக கண்ணன் புகழ் பாடிய காரைக்குடி ஆத்திகரானகண்ணதாசன் அவர்களை விட நீங்கள் எந்த வகையில் சிறந்த நாத்திகர் ?

2. திராவிடர் – என்றும் தமிழர் என்றும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதன் நோக்கம் என்ன?

3 .திராவிடர்களாக ஒன்றிணைவோம் என்று புது கோஷம் எழுகிறதே கர்நாடகதிராவிடன்- காவிரி நீர் தர மறுப்பது – கேரள திராவிடன் – முல்லை பெரியார் பிரச்சினை – இதில் தமிழக திராவிடனுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே – இதற்கு காரணம் என்ன?

4. காரைக்குடியில் இருந்து பக்கத்து ஊருக்கு தண்ணீர் தர க் கூடாது என்று உண்ணாவிரதம் இருந்து பல கட்சி தாவல் திரு பழ.கருப்பையா செட்டியார் இருந்தாரே அப்போது தாங்கள் என்ன செய்தீர்கள் ? பக்கத்து ஊர் தமிழனுக்கு ஆதரவாக இருந்தீர்களா இல்லை எதிராக இருந்திர்களா ?

5. தமிழர்கள் மீது இந்தி திணிப்பு கூடாது என்று உயிர் விட்ட மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கும் தாங்களும் தோழமை தி மு க உள்ளிட்ட கட்சிகள் திருமதி கனிமொழி -தயாநிதி மாறன் மற்றும் பலர் இந்தி கற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் பேசுவதும் – மொழி பெயர்ப்பதும் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை அவமதிப்பது போல் இல்லையா? இது பற்றி தங்கள் கருத்து என்ன?

6. சாதி ஒழித்தது பெரியார் என்று கூறும் தாங்கள் CN அண்ணாதுரை
தங்களுடைய திருமணத்தில் முதலியார் என்று தானே அச்சிட்டார். அப்படி எனில் சாதி ஒழிப்பு என்பது வெற்றுவார்த்தையா?

7. சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைப்போம் என்று மேடை தோறும் முழங்கும் தாங்களும் -திமுகவும் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதும் – சாதிக்கு இத்தனை அமைச்சர் என இலாகா பிரிப்பதும் பெரியாரின் வாரிசுகளா? இல்லை பிராமணர்களா?

8. மனுதர்மம் என்று தொடர்ந்து பேசுகிறீர்கள். இன்றைய சமூகத்தில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும். மேலும் தகப்பன் செய்த தொழில் தான் மகன் செய்ய வேண்டுமா – குலக்கல்வி கூடாது என்று எதிர்த்தீர்கள். சரி திருகி வீ மகன் திக டிரஸ்டியாகவும் -திமுகவில் பழமொழி நாயகர் பதவியில் தொடர்வதும் என்ன வகை நீதி ? எளியவர்கள் திக-திமுகவில் தலைமை பொறுப்பு வகிக்க தாங்கள் குரல் கொடுக்கலாமே – தயங்குவது ஏன்?

9. பிராமணர்கள் கூடாது – ஆதிக்கம் எதிர்க்கிறோம் – அப்படியானால் உங்களுக்கு வேண்டப்பட்ட தலைவர்களின் ஆடிட்டர் – மருத்துவர் – மற்றும் பிற துறைகளின் பொறுப்பாளர்கள் எல்லாம் பிராமணர்கள் தானே – அவர்கள் வேண்டாம் தலைவரே என்று ஒரு வார்த்தை சொல்ல உங்களுக்கு தைரியமுண்டா?

10. கலப்பு மணத்தை ஆதரிக்கும் தாங்கள் – தங்கள் குடும்பத்தில் இது போன்று ஏதாவது நடந்துள்ளதா?

11. விழுப்புரம் அருகே செந்தில் என்ற ஒரு அரிசன பையன் உயர் சாதி பெண்ணை காதலித்தான் என்பதால் கை கால் வெட்டப்பட்டது.தமிழகத்தில் இருக்க வே வெட்கப்படுகிறேன் என்று புதிய தலைமுறையில் நீலிக்கண்ணீர் வடித்தீர்களே – விசாரணையில் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்தார் என்று சொன்ன போது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா ?

12. தஞ்சை கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனை முட்டாள் . மடையன் என்று திக தலைவர் கி.வி.கூறிய கருத்தை
சுப. வீ ஆதரிக்கிறாரா ?எதிர்க்கிறாரா?

13. சிலை வணக்கம் கூடாது என்ற ஈ.வே ரா – வுக்கு சிலை ஏன்?வழிபாடு. பூ மாலை – மலர் வளையம் ஏன்? இதுவெல்லாம் பகுத்தறிவுக்கு உகந்ததா சொல்லுங்கள்’

14.பாலுக்கு குழந்தை ஏங்கி தவிக்கையிலே கல் சிலைக்கு பால் அபிஷேகம் தேவையா என்றெல்லாம் கேட்பீர்களே ஏழை விவசாயி ஏங்கி தவிக்கையிலே ஈரோடு மாநாடு இத்தனை கோடி பணச் செலவில் தேவையா என பழமொழி நாயகரிடம் கேட்பீர்களா?

15. சுய மரியாதை திருமணம் சுமார் 150 ஜோடிகளுக்கு மஞ்சள் கயிறு தாலி எடுத்து கொடுத்து பழமொழி நாயகர் நடத்தினாரே , இதற்கு ஊரான் பொண்டாட்டி தாலி அறுப்பு நாயகர் மானமிகு கி.வீரமணி என்ன சொல்ல போகிறார் . பழ மொழி நாயகர் பகுத்தறிவு புரோஹிதர் ஆனதை தாங்கள் ஆதரிக்கிறீர்களா – இல்லை தங்கள் பதில் என்ன ?

16. சங்கர மடத்தில் ஒரு அரிசனன் மடாதிபதி ஆக முடியுமா – என்று தாங்களும் சகாக்களும் முழங்குகிறீர்களே – முதலில் திராவிட இயக்க கூட்டாளி மதுரை ஆதீனம் .அந்த திருமடத்தில் சைவ பிள்ளை தவிர்த்து பிற சமூகத்தவர் வர முடியுமா? இல்லை குன்றக்குடி ஆதீன திருமடத்தில் ஒரு அரிசனன் வர முடியுமா என கேட்டு சொல்லுங்கள்.

17. எழுத்தாளர் அருமை தம்பி  மா.வெங்கடேசன் பெரியாரின் மறுபக்கம் என்ற நூலை ஆதாரங்களோடு -எழுதி உள்ளாரே அதற்கெல்லாம் பதில் உண்டா – இவரும் அப்பாவி தம்பியா இல்லை பார்ப்பண ரா?

இது போன்ற பல கேள்விகளை தங்களிடம் என்னைப் போன்ற அப்பாவி தம்பிகள் கேட்க தயாராக இருக்கிறோம். நேரம் – நாள் – இடம் – குறிப்பிடுங்கள் – பொது வெளியில் நாங்கள் தயார்.
அய்யா சுப.வீ அவர்களே
புத்தக நூல் ஆராய்ச்சி செய்யுங்கள்
தேவையில்லாத
பூ நூல்  ஆராய்ச்சியை விட்டு விடுங்கள்.

நன்றி
இப்படிக்கு
அப்பாவி தம்பி
இராம. இரவிக்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories