
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்பில், பத்திரிகைகளில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்று கூறிய அவர், அதனை யாராவது மறுத்தால் எழுத்து பூர்வமாகப் பெற்று வெளியிட வேண்டும் என்று கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.



