08-02-2023 2:33 AM
More
  Homeஉரத்த சிந்தனைபெண்களின் பாதுகாப்புக்கு சில ஆலோசனைகள்...!

  To Read in other Indian Languages…

  பெண்களின் பாதுகாப்புக்கு சில ஆலோசனைகள்…!

  girl attack image - Dhinasari Tamil

  பெண்கள் பாதுகாப்பு என்பது காலங்காலமாக பேசப்பட்டு வருவதுதான். காந்தி காலத்திலேயே, ஒரு பெண் முழுக்க நகைகள் அணிந்து நடு இரவில் தனியாகச் செல்லும் நிலை ஏற்பட்டால்தான் சுதந்திரம் முழுமையாகும் என்றார். அந்த அளவுக்கு பெண்கள் மீதான தாக்குதல் என்பது நெடுங்காலமாகவே இந்த சமூகத்தில்  இருந்து வருகிறது.

  இந்நிலையில், நாகரீகம் வளர்ந்து விட்ட இந்நாளில், ஆண்களுக்குச் சமமாக பெண்களும் பணியிடங்களில் அதிகாரம் பெற்றுத் திகழும் இந்நாட்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்த  சில ஆலோசனைகள் இவை…

  1. இரவானாலும், பகலானாலும் இரயிலில்/ பேருந்தில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில்/ பேருந்தில் ஏறாதீர்கள். நிறைய ஆட்கள்/ நபர்கள்/ பெண்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்……!

  2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்……! ( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

  3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும்
  பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்……!

  4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில்
  வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்……!

  5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில்
  எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்……!

  6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில்
  நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள். வேண்டியவர்களே அழைத்தாலும்  தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்.

  7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்……! 8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக்
  கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்……!

  # தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் , தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களே… உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்…..!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  three × 2 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,463FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

  இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  Latest News : Read Now...