December 5, 2021, 4:20 am
More

  கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய செய்தி ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

  breaking news tv screen saver background vector 18533369 - 1

  சென்னை: வதந்திகளை பரப்புவோர் மீது சட்டம் பாயும். அரசு சொல்கிறது. சரிதான். ஆனால்,  ஊருக்கு இளைச்சவர்கள் பொது மக்கள் தானே! அவர்கள் மீதுதானே சட்டத்தைப் பாய்ச்சுவீர்கள்?!

  ஊடகங்கள் சொன்னதைத்தான் பொதுமக்கள் தாங்களாகப் புரிந்து கொண்டு ஒன்றைச் சொல்கிறார்கள்!

  விளக்கமாக வேண்டுமா? இவற்றைப் படியுங்கள் .. உண்மை உங்களுக்கே தெரியும்!  வதந்தியைப் பரப்புவதில்  முதல் இடம் அத்தனை டிவிக்காரனும்தான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்…

  செய்தி ஊடகங்கள் நேற்று ஒருநாளில் கொடுத்த இந்தச் செய்திகளை, அதுவும் இரவு பகலாக எங்களை எல்லாம் தூங்க விடாமல், 24 மணி நேரமும் அலறிக் கொண்டு வரிவரியாய்க் கொடுத்த இவற்றைப் படிக்கும், பார்க்கும், புரிந்து கொள்ளும் மக்கள் எத்தகைய முடிவுக்கு வருவார்கள்…? யோசித்துப் பாருங்கள்.

  சேலத்தில் முதல்வர் அனைத்து நிகழ்சிகளையும் ரத்து செய்தார். அரசு விழாக்கள் ரத்து..

  முதல்வர் உடனே சேலத்தில் இருந்து கோவைக்கு விரைந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.. (ஏன் அவ்வளவு அவசரம். அரசு விழாக்களை, மக்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய விழாக்களை ரத்து செய்யும் அளவுக்கு சென்னையில் அப்படி என்ன அவசரம்?! அந்தக் காலத்தில் போல் தந்தி அடித்து வருவதென்றால்தான் அப்படி அவசரம் காட்டுவார்கள்… – என்ற நினைப்புக்குத்தானே சாதாரண மக்கள் வருவார்கள்?!)

  சென்னை வந்த முதல்வர், துணை முதலவர் மருத்துவமனைக்கு விரைந்தனர்..

  மருத்துவமனை transient set back என்று அறிக்கை அளித்துள்ளது. transient என்றால் தற்காலிக என்று பொருள்…

  ஆனால் வெகு நேரம் ஆகியும் சீரானதற்கான அறிக்கையை மருத்துவமனை வெளியிடவில்லை ..

  மக்கள் திருவாரூரில் இருந்து சாரிசாரியாகப் புறப்பட்டு வருகின்றனர்.. அவர் குடும்பத்தில் அனைவரும் வந்தாகி விட்டது.

  இவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணி ………

  ஏண்டா மக்கள் பாட்டுக்கு அவன் வேலைய பாத்துகிட்டு நடு நடுல டிவியில நியூஸ் பாக்கலாம்னு டிவி.,யை திருப்புனா.. ஃபூட்டேஜ் குறையாம நீட்டு நீட்டா வசனம் பேசி பேட்டி எடுத்து, அந்த நிருபர் இந்த நிருபர்னு வாய்ஸ் கால் அப்டேட் பண்ணி..

  பொன்விழா காணொளி போட்டு மக்களை உசுபேத்தி வுட்டா…

  நாங்க என்னதான் முடிவுக்கு வருவோம் .. ஓ அப்படிதான் போல இருக்குன்னு!

  செய்யிற எல்லா வேலையும் இவனுங்க பாத்துபுட்டு… சும்மா இருக்குற மக்களிடம் சொல்றாங்க …. வதந்தியைப் பரப்ப வேண்டாம்.. பரப்பினால் சட்டம் பாயும்..!

  – குமுறும் பொதுஜனத்தில் ஒருவன்! 

  1 COMMENT

  1. இந்த செய்தியை கொடுத்த ரம்யா ஸ்ரீக்கு நன்றி, வதந்திகளை பரப்பும் தொலைக்காட்சி உரிமையாளர்களை முதலில் கைது செய்தால் தான், தண்டித்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசு செய்யுமா ?

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,791FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-