பாடகி சின்மயி எழுப்பியுள்ள கேள்விகள், இப்போது பலரது முகத்திரையைக் கிழித்து வருகிறது. குறிப்பாக இருட்டில் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் கறுப்புத் திரையினர் சமூக வலைத்தளங்களில் பலவாறாக வறுபடுகிறார்கள்.
குறிப்பாக, அருள்மொழி! எந்த விவகாரத்தையும் சாதீயக் கண்ணோட்டத்தில் பார்க்கும் இயல்பு கொண்ட சமூகப் போராளிப் பட்டம் பெற்ற அருள்மொழி, பாடகி சின்மயி விவகாரத்திலும் சாதி- பார்ப்பன வெறி என்றார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன் Ananthakrishnan Pakshirajan பேஸ்புக்கில் ஒரு பதிவினைச் செய்திருந்தார்… அதில்,
“தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. ” இது திருமதி அருள்மொழி. ஆனால் சின்மயி மீறியிருக்கிறாராம். இவர்கள் நாசிச் சாக்கடையில் தினமும் குளித்துக் கொண்டிருப்பவர்கள் என்று நான் சொன்னால் கோபம் வருகிறது. ஒரு மொத்தச் சாதிக்குழுவிற்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்பும் இவர் சமூகநீதிப் போராளி என்று சொல்லிக் கொண்டும் அலையும் அதிசயம் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்.
இவர் இப்படிச் சொல்லலாம் என்றால் மற்றொருவர் மற்றொரு சாதியைக் குறிப்பிட்டு இந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நாற்றமடிப்பது இயல்பு, திருட்டு இயல்பு, அடுத்தவன் மனைவியைப் பெண்டாள்வது இயல்பு என்று சொல்லக் கூடாதா? அவருக்கும் சமூகநீதிப் போராளி பட்டம் கிடைக்குமா?




