December 5, 2025, 9:24 PM
26.6 C
Chennai

ஸ்ரீ கிருஷ்ண லீலா ; கி வீரமணிக்கு விளக்கம்!

srikrishnaleela vasthrabaharanam - 2025ஸ்ரீ கிருஷ்ண லீலா – கி வீரமணிக்கு விளக்கம்

ஹிந்து மத தெய்வங்களை மட்டுமே விமர்சிப்பது அதற்கு பிராமண எதிர்ப்பு என்று அடையாளம் இடுவது இதுதான் திராவிட கழக ஈவெராவை தந்தை என்று கொண்டாடுபவர்களின் கொள்கை.

ஸ்ரீ கிருஷ்ணரை “மீடூ” விலும், “பாலியல் அத்துமீறலிலும்” குற்றம் சாட்டவேண்டும் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தொடர்புபடுத்தி பேசுகிறார் கி.வீரமணி.

ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பல வருஷமாக திராவிட இயக்கம் சொல்லிவரும் இந்த விஷயம் என்ன? இது குறித்து ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள செய்திதான் என்ன?

கி.வீ சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? என்று பார்ப்போம்..

ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தில் 21-23 அத்தியாயத்தில் இந்த சம்பவம் வருகிறது.

நந்த கோகுலத்தில் உள்ள சிறு பெண்கள் எல்லோரும் ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழி மாதத்தில் அந்த மாதம் முழுதும் ஹவிஸ்ஸை சாப்பிட்டு காத்யாயினி விரதத்தினை கடைபிடித்து வந்தனர். இந்த விரதமே எதற்கு என்றால்,ஸ்ரீ கிருஷ்ணனை கணவனாக அடையவேண்டும் என்னும் விரதம்.

krishna kuchela - 2025

ஸ்ரீ கிருஷ்ணர் அந்த பெண்களின் மீது ஆசை கொண்டு நடந்து கொண்டார் என்று சித்தரிக்கும் கி.வீரமணிக்கு ஸ்ரீமத் பாகவதத்தில் என்ன சொல்லியுள்ளது என்பது தெரியவில்லையா? அல்லது தெரிந்திருந்து மறைக்கிறாரா? தெரியாத விஷயத்தினை பேசக்கூடாது, தெரிந்திருந்தால் மறைக்கக் கூடாது. அந்த கோபிகைகள் அல்லவா ஸ்ரீ கிருஷ்ணனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார்கள். உண்மை இப்படியிருக்க ஸ்ரீ கிருஷ்ணன் மேல் “மீடூ” குற்றம் சொல்லும் கி.வீயின் வாதம் அர்த்தமற்றது காழ்புணர்வு கொண்டது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்படித்தான் மறைந்த பாரதப் பிரதமர் வாஜபேயி அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்திய நாணயங்களில் ஓ , எம் (O,M) என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வந்தது  “ஓம்” என்ற ஹிந்து மத தொடர்புடைய மந்திரம் அச்சிடுவதாக அறிக்கைவிட்டார் கி.வீரமணி.

கி.வீரமணியின் அபத்த அறிக்கையை சுட்டிக்காட்டி திருச்சி நாணயவியல் சங்கத் தலைவரும், பொதுவுடைமை தோழருமான அறிஞர் பழங்காசு ப.சீனிவாசன் அவர்கள்.  இந்திய நாட்டு நாணயங்கள் வெளி நாட்டில் தயாரிக்கப்படுவதையும் அந்த நாட்டு அடையாளத்தினை குறிக்கும் விதமாக “ஓ”(O) மற்றும் “எம்”(M) என்ற ஆங்கில எழுத்துக்கள் இருப்பதையும் கடிதம் மூலம் கி வீரமணிக்கு தெரிவித்தார். மெக்சிகோ நாட்டில் தாயாரிக்கப்படும் நாணயங்களில் O,M என்ற எழுத்துக்கள் இருக்கும்.

ஒரு பிரபல அமைப்பை நடத்துபவர் விவரம் தெரியாமல் அறிக்கை விடுவதும்,அல்லது போலியாக செய்தி பரப்புவதும் சரியா? என்று கேட்டிருந்தார். கி.வீ ஏனோ அதற்கு பதில் சொல்லவில்லை. இதுதான் இவரின் பண்பாடு, அறிவுத்திறன்.

யமுனா நதிக்கரையில் குளித்துக்கொண்டிருந்த கோபியர்கள் உடைகளை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த கடம்ப மரத்தின் மீது ஸ்ரீ கிருஷ்ணர் ஏறிக்கொண்டார். தனித்தனியாகவோ அல்லது கூட்டமாகவோ நதியிலிருந்து வெளியே வந்து என்னிடமிருந்து உங்கள் ஆடைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.

ஏன் அப்படி சொன்னார் என்றால் அதற்கும் அவரே பதில் சொல்லுகிறார்  “விரதம் இருக்கும் நீங்கள் ஆடையின்றி குளிக்கக்கூடாது” என்கிறது சாஸ்திர விதி. நீங்கள் செய்வது தவறு, அதை உணர்த்தவே ஆடையின்றி குளித்த அவர்களை வெளியே வரச் சொன்னேன். என்றும், அப்படி வெளியே வரும் பெண்களை இரு கைகளையும் தலைமேல் கூப்பியபடி வெளியே வரவேண்டும் என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆனால் அந்த பெண்கள் ஒரு கையால் மறைக்கவேண்டிய உறுப்பை மறைத்துக்கொண்டு ஒரு கையால் வணக்கம் தெரிவித்துக்கொண்டும் வந்தனர்.

ஒரு கையால் வணக்கம் செலுத்துவது தவறானது என்கிறது தர்ம சாஸ்திரம்,அதனால் தான் இருகைகளையும் தலைக்குமேலே தூக்கியபடி வணக்கம் செலுத்திக்கொண்டு வர சொன்னேன். இதுவே விரதகாலத்தில் நிர்வாணமாக குளித்ததற்கு பிராயச்சித்தம் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.     பாகவதம் (10வது ஸ்கந்தம் 17-28).

இவை மட்டுமே பாகவதம் காட்டும் காரணங்கள் அதே சமயம் உள்ளீடாக ஸ்ரீ கிருஷ்ணர் உணர்த்தும் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் உடல் மீதான பற்று கடவுளை அடையவிடாமல் தடுக்கும் என்பதே. இந்த உடல் வேறு, ஆன்மா வேறு என்ற தத்துவ ஞானம் இல்லாதவரால் கடவுளை அடைய முடியாது உடல் மீதான பற்று நீங்கவேண்டும் என்பதனையும் உணர்த்தவே ஸ்ரீ கிருஷ்ணர் ஆடையின்றி குளிக்கும் பெண்களை தலைக்கு மேல் கைகளை தூக்கி வணங்கியபடி குளத்திலிருந்து வெளியே வந்து ஆடைகளை பெற்றுக்கொள்ள சொல்கிறான்.

samohana krishnar - 2025

விரத காலத்தில் ஆடையின்றி குளிக்கக் கூடாது என்பது, ஒரு கையால் வணக்கம் / நமஸ்காரம் செலுத்தக் கூடாது என்பதுடன் உடல் மீது பற்று உள்ளவர்கள் கடவுளை அடைய முடியாது என்ற தத்துவத்தினையும் ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளுக்கும் நமக்கும் உணர்த்துகிறார். அதனை புரிந்து கொள்ளவே கோபிகைகளின் ஆடையை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சியை புகைப்படமாக ஓவியமாக வீடுகளில் ஹிந்துக்கள் வைத்து வழிபடுகின்றனர்

மேலும் இந்த லீலையை செய்தபோது ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வயது எட்டு. .

தத்துவங்களை புரிந்து கொள்ளாது ஸனாதன எதிர்ப்பு என்கிற பார்வையில் பார்த்தால், நாணயத்தில் உள்ள  ஓ, எம் என்கிற எழுத்துக்கள் OM ஓ‌ம் என்கிற மந்திரத்தினை குறிக்கிறது என்று குற்றம் சாட்டியது போல இருக்கும்.

நாமும் கூட கேட்கலாம் “தந்தை பெரியார்” என்கிறீர்களே  தந்தை என்பது எப்படி என்றும்?  “சுய முயற்சியால் எல்லாம் முடியும்” என்ற / என்கிறாயே,ஈவெராவுக்கு ஏன் இரண்டு மனைவி இருந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றும் கேட்கலாம். நாகரீகம் கருதி நாம் கேட்பதில்லை என்பதால்தான் கி.வீரமணி ஹிந்துக்களினை இகழ்ந்து  பேசுகிறாரோ என்னவோ?  .

மகள் என்று வளர்த்து மனைவியாக்கிக் கொண்டவர் வழி வந்தவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் லீலை தவறாக தெரிவதில் வியப்பில்லையோ?

  • ஆரியத் தமிழன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories