பாக்ரி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
பால், எண்ணெய், தேன் – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் சீரகம், உப்பு, வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக்கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் போட்டு ஆங்காங்கு கீறிவிட்டு, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து தேன் தடவி பரிமாறவும்.
குறிப்பு: பாக்ரி செய்யும்போது அடுப்பை குறைந்த தணலில் வைத்தே செய்யவும். இது ஒரு வாரம் வரை கெடாது.