ஆரோக்கிய சமையல்: சீராளக் கறி!

Published:

siralam
siralam

சீராளக் கறி

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப், பொட்டுக்கடலை பொடி – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 2 (நறுக்கிக் கொள்ளவும்),
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
பட்டை – சிறிதளவு,
கிராம்பு – 2,
சோம்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு பாசிப்பருப்பு, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, பாசிப்பருப்பு சிறிது வெந்ததும் இறக்கவும். இதனை இட்லித்தட்டில் பரப்பி வைத்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும். புரோட்டீன் நிறைந்த சத்தான சிற்றுண்டி இது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img