லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோதுமை வெஜ் புலாவ்!

Wheat Veg Pulao
Wheat Veg Pulao

கோதுமை வெஜ் புலாவ்
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
பட்டை – சிறுதுண்டு
கிராம்பு – 2 (அ) 3
ஏலக்காய் – 2 (அ) 3
பிரியாணி இலை – ஒன்று
எண்ணெய் (அ) நெய் – ஒரு மேசைக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் – கால் கப்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோதுமை ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் தண்ணீரில் களைந்து, வடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய் (எண்ணெயும் நெய்யும் கலந்தும் உபயோகிக்கலாம்) ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் தேங்காய் பாலுடன் தண்ணீர் கலந்து மொத்தம் ஒன்றரை கப் அளவிற்கு சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் களைந்து வைத்துள்ள கோதுமை ரவையைச் சேர்த்து கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

தண்ணீர் வற்றி கோதுமை ரவை வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து கிளறவும். சிறுதீயில் மேலும் 3 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

சுவையான கோதுமை வெஜ் புலாவ் தயார். ஆனியன் ரைத்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதனுடன் பட்டாணி சேர்த்தும் செய்யலாம். தேங்காய் பால் அளவை சற்று அதிகமாக்கிக் கொண்டால் சுவை இன்னும் அதிகரிக்கும். தண்ணீர் வற்றி கோதுமை ரவை வேகாதது போல் இருந்தால் மேலும் கால் கப் வெந்நீர் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய் குறைவாக சேர்க்கவும். இது அதிக காரம் இழுக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories