ஆரோக்கிய சமையல்: கீரை மண்டி!

Published:

kirai mandi - 2026

கீரை மண்டி

தேவையான பொருட்கள்:
ஏதாவது ஒரு வகை கீரை – ஒரு கட்டு (ஆய்ந்து, நறுக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 5 பல் பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்)
அரிசி கழுவிய மண்டி – இரண்டு கப் (அரிசி கழுவிய தண்ணீரைத் தெளியவிட்டு அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்) தேங்காய்ப்பால் – கால் கப்
கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை நன்கு வெந்ததும் மண்டி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img