Banana Paniyaram - 2026

ஆரோக்கிய டிபன்: வாழைப்பழ பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Banana Paniyaram - 2026

வாழைப்பழ பணியாரம்
தேவையான பொருட்கள்

ரவை – 100 கிராம்
மைதா – 100 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் – 100 கிராம்
திக்கான தேங்காய் பால் – 1 கப்
பெரிய நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
நெய் – 50 மில்லி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை

வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து அதனுடன் மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான வைத்து சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும்.
சுவையான ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.