health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் பிரச்சினைகளுக்கு..!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வயிற்றில் பூச்சிகள்

வேப்பிலையை இடித்துச்சாறெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி வீதம் எள் கலந்து பருகிவர வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று வேளை பருகிவந்தாவ் வயிற்றில் உள்ள பூச்சிகள் யாவும் மலத்துடன் வெளியேவந்துவிடும். வயிறு சுத்தமாகும்.

உஷ்ண வயிற்றுக்கோளாறு

வேப்பம் பூவை உப்பு கலந்த மோரில் கலந்து ஊறவைக்க வேண்டும். அதன்பின்னர் அந்தப்பூக்களை நிழலில் உலர்த்தவேண்டும். உலர்ந்த பூக்களை நெய்யில் வறுத்து சாதத்துடன் கலந்து உண்டுவர உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்றுக்கோளாறுகள் அகலும்.

வயிற்றுப்பொருமல்

பெருங்காயத்தை நல்லெண்ணெயில் பொரித்து அம்மியில் வைத்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக்கவேண்டும். பின்னர் இந்தப்பொடியை, துளாக்கிய மண்டை வெல்லத்துடன் கலந்து நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாக்கிக் கொள்ளவேண்டும். தினமும் மூன்றுவேளை ஒவ்வொரு உருண்டையை உண்டு வெந்நீர் அருந்திவந்தால் வயிற்றுப்பொருமல் அகலும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் அகல

திராட்சை ரசத்தை தினமும் காலை, மாலை என இருவேளையும் அருந்திவர
வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.

வயிற்று உப்புசம் அகல டர்பன்டைன் மருந்தை வயிற்றின் மேல் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவந்தால் வயிற்று உப்பிசம் அகலும்.

வயிற்று இரைச்சல்

அன்றாடம் வெந்தயத்தையும், மோரையும் உணவில் அதிக அளவு சேர்த்துவர வயிற்றிள் இரைச்சல் குணமாகும்.

வயிற்று எரிச்சல்

கரும்புச் சாறுடன் சுக்கைப்பொடி செய்து சுலக்கி காலை, மாலை இரு நேரமும் அருந்தி வர வயிற்றின் எரிச்சல் மூன்றே நாட்களில் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.