thinai pudalankai katlet - 2026

ஆரோக்கிய டிபன்: மில்லெட் புடலை கட்லெட்

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thinai pudalankai katlet - 2026

மில்லட் புடலை கட்லெட்
தேவையான பொருட்கள்

2 கப் தினை மாவு
1/4 கப் நிலக்கடலை •
2 கப் நாட்டு சர்க்கரை
1 புடலங்காய்
5 பேரிச்சம்பழம்
1 ஏலக்காய்

செய்முறை

. முதலில் நிலக்கடலையை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

பின் தினை மாவை நன்கு வறுத்து அதனை உடைத்த வேர்கடலையுடன் சேர்க்கவும், பேரிச்சம்பழத்தை எடுத்து சிறிது நீர் சேர்த்து எலக்காயுடன் நன்கு மைய அரைக்கவும்.

இவற்றை தினை வேர்க்கடலை மாவுடன் சேர்த்து தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
இந்த கலவையை நன்கு கிளறிக் கொள்ளவும்.
பின் புடலையை எடுத்து அதனை ஒரு இன்ச் அளவிற்கு வட்டமாக நறுக்கவும்

உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்து விட்டு அதனில் கலந்து வைத்திருக்கும் தினை கலவையை சேர்க்கவும்.
இவ்வாறு ஸ்டப் செய்த புடலை தினை கட்லெட்டை அழகாக அடுக்கி வைத்து சிறிது நறுக்கிய காரட் துருவலை அதன் மேல் தூவி பரிமாறவும்.
காய்கறிகள், சிறுதானியங்களை எளிதில் இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.