மும்பையில் மிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த 10 கோடி ரூபாயை, ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சவேரி பஜாரில் உள்ளமிகச்சிறிய அலுவலகம் ஒன்றில் 1,764 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, மும்பை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சமீபத்தில் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, தரையில் பதுக்கி வைத்திருந்த 9.78 கோடி ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்புஉள்ள 19 கிலோ வெள்ளிக் கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.வீட்டில் இருக்கும் கழிவறை அளவுக்கு மிகச்சிறியதாக இருந்த அலுவலகத்தில் 1,764 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்தியது.இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.





