செனனை அருகே மீனவர்களிடையே மோதல்.. இருவர் கொலை..

செனனை அருகே மீனவர்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்களை கொலை செய்த நண்பரை போலீசார் இன்று கைது செய்தனர்.

IMG 20220501 WA0115 - 2026

சென்னை திருவான்மியூர் நடுக்குப்பம் செல்வி என்ற பெண் கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இவருடைய 16-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த நெருங்கி நண்பர்களான மீனவர்கள் சதீஷ்குமார் என்கிற பாபு (வயது 27), அருண் (22), தினேஷ் (22) ஆகிய 3 பேரும் பங்கேற்றனர். காரியத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வீட்டின் வெளியே உணவு பரிமாறப்பட்டது. அருணும், பாபுவும் ஒரு வரிசையிலும், தினேஷ் எதிர் வரிசையிலும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் அருண் விளையாட்டாக செருப்பை எடுத்து வீசிய போது செருப்பில் இருந்த மண் தினேஷ் சாப்பாட்டில் விழுந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார். அப்போது சண்டையை விலக்க வந்த பாபுவையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அருணும், பாபுவும் ஒன்று சேர்ந்து தினேஷை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் அருணும், பாபுவும் நடுக்குப்பம் கடற்கரை பகுதியையொட்டி உள்ள பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். 

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அப்போது தினேஷ் கையில் மீன்வெட்டும் கத்தியுடன்  ஆவேசமாக வந்து அருணையும், பாபுவையும் சரமாரியாக தாக்கினார். 

உயிருக்கு பயந்து ஓடிய 2 பேரையும் கொலைவெறியுடன் ஓட, ஓட விரட்டி சென்று குத்தி உள்ளார். பின்னர் தினேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ரத்த காயத்துடன் கிடந்த 2 பேரையும் ஊர் மக்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அருண், பாபு ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. 

நண்பர்களை கொலை செய்த தினேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories