
பள்ளி கழிவறையில் அங்கன்வாடி மைய அமைப்பாளருடன் பள்ளி ஆசிரியர் தகாத முறையில் நடந்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 4 வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக பணியாற்றி வரும் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி கழிவறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஆசிரியர் சரவணனும், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலே தகாத உறவில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் வகுப்பறைக்கு நேரில் சென்று ஆசிரியர் சரவணனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சத்திரம் காவல்துறையில் ஆசிரியர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியரே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



