December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

தீபாவளி விடுமுறை விவகாரம்: பள்ளிக் கல்வி துறையில் கிறிஸ்தவ அதிகாரிகள் ஆதிக்கம் என புகார்!

dpi office chennai - 2025

தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிப்பு செய்யப் பட்டிருப்பதில், பள்ளிக் கல்வித் துறையில் கிறிஸ்தவ அதிகாரிகளின் ஆதிக்கம் இருப்பதுதான் காரணம் என்று கூறுகின்றனர் ஆசிரியர்கள் பலர்.

பல ஆண்டுகளாகவே பள்ளிக் கல்வி துறையில் கிறிஸ்துவ அதிகாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. நாம் படிக்கும் காலத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை பொங்கல் பண்டிகையோடு சேர்ந்து வரும்.

கிறிஸ்துவ அதிகாரிகள் ஆதிக்கத்தால் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக ஐனவரி முதல் வாரத்தில் நடந்து வந்த அரையாண்டுத் தேர்வினை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வைத்துக் கொள்ள நெருக்கடி கொடுக்கப்பட்டு, டிசம்பர் 22 முதல் விடுமுறை என்று மாற்றம் செய்யப்பட்டது.

(சராசரியாக மூன்று பருவங்களும் தலா மூன்று மாதங்கள் வர வேண்டும். ஆனால் இப்போது மாற்றப்பட்டு முதல் பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரை சுமார் 4 மாதங்கள்; ஆனால் இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் பாதி என 2 1/2 மாதங்கள் மட்டுமே. மூன்றாம் பருவம் ஐனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்கள்…)

school 2 - 2025

ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் நேரத்தில் குழந்தைகள் ஊருக்குச் செல்வர். பள்ளி வருகை சதவீதம் குறையும். எனவே ஐந்து நாட்கள் விடுமுறை என்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது பிற துறைகள் போல பண்டிகை நாள் அன்று மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப் பட்டு வருகிறது.

தற்போது இதன் உச்சமாக, இந்த ஆண்டு தீபாவளி 27.10.2019 ஞாயிறு அன்று வருவதால் அன்று மட்டும் விடுமுறையாம். எப்போதும் விடுமுறை விடப்படும் சனிக்கிழமை கூட, தீபாவளி முதல் நாள் அன்று வேலை நாளாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அடுத்த நாள் திங்கட்கிழமையும் வேலைநாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்துப் பண்டிகைகளை குறிவைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கிறிஸ்தவ அதிகாரிகள் குறித்து, இந்து அமைப்புகள் கவனத்தில் கொள்ளுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் மாணவர்களின் பெற்றோர். இது குறித்த விவாதங்களும் சமூகத் தளங்களில் நடத்தப் பட்டு வருகிறது.

இத்தகைய சர்ச்சைகள் உருவான நிலையில், பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28 ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம். அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது…. இதுவும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஏற்கெனவே பல்வேறு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளிலும் ஆசிரியர்களாக கிறிஸ்துவர்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மட்டத்திலும் ஹிந்து விரோத கிறிஸ்துவர்கள் சதிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப் படுவது, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குமுறுகின்றனர் பாதிக்கப் பட்டுள்ள ஆசிரியர்கள் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories