செஞ்சி அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 10ம் தேதி 216 லேப் டாப்கள் கொண்டு வரப்பட்டன.
இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர் ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், அனந்தபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.