கிருஷ்ணர், அத்திவரதர் குறித்து இழிவாகப் பேசி, ஹிந்து உணர்வாளர்களிடம் கொதிப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய சிறுமுகை பகுதி துணிக்கடைக்காரர் காரப்பன் மீது கோவை மாநகர போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரப்பன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள காரப்பன் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில், ‘காரப்பன் சில்க்ஸ்’ கடை உரிமையாளர் காரப்பன், கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ஹிந்து கடவுளர்கள் குறித்து இழிவாகப் பேசினார். நாத்திகராகவும் திராவிட இயக்கங்களின் தொடர்புள்ளவராகவும் கூறப் படும் காரப்பன் இவ்வாறு பேசிய வீடியோ பதிவுகள் சமூகத் தளங்களில் வைரலாகின.
இதனால் ஹிந்து உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, இவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
‘ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய காரப்பன் கைது செய்யப் ப்ட வேண்டும்; ஊர்க் கோவிலில், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் அவர் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஹிந்து இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன. காரப்பன் மீது காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன. இதை அடுத்து, காரப்பன் மீது பீளமேடு போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதக் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் வகையில் பேசியது என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்து முன்னணி சார்பில் சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆயினும், காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ‘காரப்பன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்தரங்கு நடந்த இடம், கோவை நகரிலுள்ள பீளமேடு பகுதி; எனவே, கோவை மாநகர போலீஸ்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என கோவை ரூரல் போலீசார் வழக்கம் போல் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்தனர்.
‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!
ஆனால், டிஜிபி அலுவலகம் முன்னர் அனுப்பிய சுற்றறிக்கையில், குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பின், சம்பவ இடத்தைக் காரணம் கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் தட்டிக்கழிக்கக் கூடாது; வழக்குப்பதிவு செய்து, பின்னர் வழக்கின் விசாரணையை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாம் என கூறியிருந்தது. எனினும், ‘சம்பவம் நடந்த காவல் எல்லை’யைக் காரணம் காட்டி கோவை ரூரல் போலீசார் தட்டிக் கழித்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பாஜக., நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரணிடம் நேரில் புகார் அளித்ததை அடுத்து, இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை அடுத்தே, காரப்பன் மீது பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் மத உணர்வை தூண்டுதல், இழிவாகப் பேசுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) (பி), மற்றும் 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ், பீளமேடு போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கமாக, இந்து மத தெய்வங்கள், இந்து பண்டிகைகள், இந்து கலாசாரம், ஆன்மிக நிகழ்வுகள், இந்து இயக்கத் தலைவர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட எவர் குறித்தும் மனம் போன போக்கில் அவதூறு கிளப்பியும், இழிவு படுத்தியும் பேசுகின்ற எவர் மீதும் இதுவரை தமிழக போலீஸார் நடவடிக்கை எடுத்ததில்லை.
அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், திக., தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்என கட்சித் தலைவர்கள் தொடங்கி, இலக்கியம், சினிமா என்ற போர்வையில் செயல்படும் வைரமுத்து, பாரதிராஜா போன்றவர்கள், மோகன் சி லாசரஸ் உள்ளிட்ட கிறிஸ்துவ மத போதகர்கள், கிறிஸ்துவ தலைவர்கள், இஸ்லாமிய கட்சித் தலைவர்கள், டிவி., விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் பேசும் நபர்கள், டிவி.,க்களில் செய்தியாளர்கள், நெறியாளர்கள் போர்வையில் பணிபுரியும் கம்யூனிஸ நாத்திக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பத்திரிகை உலகத்தினர் என்ற பெயர்களில் இயங்கும் பலர் என எவர் மீதும் இதுவரை புகார்கள் கொடுக்கப் பட்டும் உறுதியான நடவடிக்கை எதுவும் திராவிட இயக்கங்களின் பின்னணியில் வந்த ஆட்சிகள் நடைபெற்று வரும் தமிழகத்தில் எடுக்கப்பட்டதில்லை. சொல்லப் போனால், அவதூறாக எழுதிய எழுத்தாளர் இப்போது எம்.பி., ஆகி விட்டார். சிலர், சாகித்திய அகாடமி விருதும் பெற்று விட்டார்கள்.
மதக்கலவரம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்றெல்லாம் சொல்லப் பட்டாலும், இதுவரை இந்த விவகாரங்களில் தமிழகத்தில் அமைதியே நிலவுகிறது என்பதால், போலீஸார் வழக்கம் போல் காரப்பன் விவகாரத்தையும் சாய்ஸில் விட்டுவிடுவார்கள் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப் படுகின்றன.
அதே நேரம், ஈ.வே.ரா சிலையைப் பார்த்து செருப்பு வீசியவரை குண்டர் சட்டத்தில் அடைத்தும், திருவரங்கம் கோயிலில் கருவறைக்குள் நுழைந்து செருப்பு வீசியவரை ‘மனநலம் பாதிக்கப் பட்டவர்’ செய்த செயல் என்று கூறி வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தும் போலீஸார் தங்கள் கடமை ஆற்றியிருக்கின்றனர் என்பதால், காரப்பன் விவகாரத்தில் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை தாங்கள் நம்புவோம் என்று கூறுகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த விவகாரம் போலீஸாருக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருப்பதாகக் கூறப் படுகிறது.
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – 1 – எம்பெருமான் இராமன் மீது அவதூறு!
ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த அவதூறுப் பிரசாரம்… திட்டமிட்ட சதியின் நீட்சி!
மாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!
திக வீரமணியின் கிருஷ்ணர் குறித்த அவதூறுப் பேச்சும் எதிர்வினைகளும்!
லயோலா.. அவதூறு கிளப்பி… பின் மன்னிப்பு கேட்டால் போதும்! வழக்கு தள்ளுபடி! |
திருமண மந்திர அவதூறு – ஸ்டாலினுக்கு சில கேள்விகள்
குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!
பிரதமர் குறித்து அவதூறு: தமுமுக.,வினர் மீது வழக்கு பதிவு!
ஆளுநர் குறித்து அவதூறு: சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு!
மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!