மாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

pa ranjith rahul gandhi - 2026

தரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

தமிழ் மண்ணின் பெருமையைப் பறை சாற்றும், தமிழர்களின் மதிப்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்தும் கேவலமாகவும் பேசிய  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நடந்த கூட்டம் ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய போது, தமிழகத்தில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். அதற்கு முக்கிய காரணம் நிலங்கள். அதன் அடிப்படையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்டகாலம்.

ranjithh3 - 2026சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான்! மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம் என்றெல்லாம் மிக மோசமாகவும் தரம் தாழ்ந்தும், தமிழர்களின் பெருமையை சிதைக்கும் விதமாகவும் பேசினார்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சை கண்டித்தனர்.  தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப் பட்டது.

இந்நிலையில் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி மூலம் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. வர வர திரைத்துறையினரின் அரசியல் பிரவேசம் தாங்க முடியலை. அவனவனுக்கு அரசியல் பேசறாங்க. ஒரு எம் ஜி ஆர் முதல்வராக ஆனாலும் ஆனார். அப்பறம் சினிமாவில் நடிக்கும் எல்லோருமே முதல்வர் ஆகும் கனவில் தான் இருக்கிறார்கள். நடிச்சோமா பணத்தை சேத்தோமான்னு இல்லாது, என்ன அரசியல் வேண்டிக்கிடக்கு? ரஞ்சித் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் தான். ஆ ஊ ன்னா தலித், தாழ்த்தப்பட்டவர், திராவிடர், தமிழன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியது. தரம் தாழ்ந்துகொண்டே வரும் மனிதர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories