விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக, அவருடைய கட்சியினர் மிக மோசமாகப் பேசியதற்காக, அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள புகார் மனுவில்…
அண்ணல் அம்பேத்கார் சிலை உடைப்பு சம்பவம் குறித்து….
வணக்கம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தினங்களுக்கு முன் காவல் நிலையம் அருகை உள்ள அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது. இச்செயல் வன்மையான கண்டத்திற்கு உரியது. சாதிக் கலவரத்தை தூண்டும் நோக்கில் இச்செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும் இது போல் எங்கும் நடக்காதவாறு வரும் தலைமுறை இளைஞர்கள் அனைவரும் அனைத்து தேசிய தலைவர் குறித்தும் அறிந்துகொள்ள அவர்கள் செய்த தியாகங்களை பற்றிய பொது அறிவை கற்றுகொடுக்க தமிழக அரசு முனனப்பு காட்ட வேண்டும்.
தமிழக அரசு அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தலைவர்களான முத்துராமலிங்க தேவர், காமராஜர் , வ.ஊ.சி. பாரதியார் , கக்கன், சுந்தரலிங்கம் , ஓண்டி வீரன், பூலித்தேவர் அழகு முத்துக்கோன் போன்ற எண்ணற்ற தேசிய தலைவர்கள் குறித்து பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறையை தூண்டும்விதமாக கோஷம் எழுப்பி உள்ளார்கள் இச்செயல் வன்மையாக கண்டனத்திற்கு உரியது !
தொடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்முறை செயல்களை தூண்டும் விதத்தில் செயல்படுவது வாடிக்கையாகிறது.
எனவே நேற்று நடந்த ஓர் ஆர்பாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி வன்முறை தூண்டும் விதமாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும்.
இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..
இந்தக் கோரிக்கையை திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினர்.