April 28, 2025, 3:34 PM
32.9 C
Chennai

வேலைக்காக மதம் மாறி இருந்தால் பணி நீக்கம்: நீதிமன்றம்!

court-1
court-1

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக ஒருவா் மதம் மாறியிருப்பது தெரிய வந்தால், அவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கௌதமன் என்பவா் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக கடந்த 2007-இல் நியமிக்கப்பட்டார்

இப்பதவியில் இவரை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் தகுதியான விண்ணப்பதாரா்கள் இல்லாததால், கௌதமனை இப்பதவியில் நியமிப்பதாகவும், அவா் ஓராண்டு காலத்துக்குள் நூலக அறிவியல் பட்டத்தை பெற வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிா்வாகம் உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டுக்குள் இப்பதவிக்கான கல்வித்தகுதியை கௌதமன் பெறவில்லை.

எனவே, அவரை பணி நீக்கம் செய்யவேண்டுமென அதே பல்கலைக்கழகத்தில் நூலகப்பிரிவில் பணியாற்றும் ரமேஷ் கடந்த 2017-இல் புகாா் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை குழு,

நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரி பதவியைப் பெற கௌதமனுக்கு கல்வித் தகுதி இல்லை என கடந்த 2017 ஏப்ரல் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது.

ALSO READ:  ஏப்.7ல் திட்டமிட்டபடி தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! நீதிமன்ற தடை நீக்கம்!

ஆனால், கௌதமனுக்கு தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவி உயா்வை பல்கலைக்கழக நிா்வாகம் கடந்த 2017 ஆகஸ்ட் 10-இல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பாரதியார் பல்கலைக்கழக நூலகப் பிரிவில் பணியாற்றும் ஆா். ரமேஷ், எஸ். ராம்குமாா், எஸ்.கனகராஜ் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனர்.

இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென பாரதியார் பல்கலைக்கழகம், கௌதமன் சாா்பில் தனித்தனியாக பதில்மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், உரிய கல்வித் தகுதி இல்லாத கௌதமனை, நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், இப்பதவியைப் பெற முழு தகுதி உடைய ஒருவரது உரிமையைப் பல்கலைக்கழகம் பறித்துள்ளது.

புகாா் குறித்து விசாரணை நடத்திய, விசாரணை குழு, கௌதமனுக்கு கல்வித் தகுதி இல்லை என அறிக்கையளித்த பின்னரும், அவருக்கு பல்கலைக்கழகம் பதவி உயா்வு வழங்கியுள்ளது. அது மட்டுமல்ல அவரைப் பணியிலிருந்து ஓய்வு பெறவும் அனுமதித்துள்ளது.

ALSO READ:  IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

இதுபோன்ற வழக்கு, இந்த உயா்நீதிமன்றத்துக்கு புதிதல்ல. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், இதுபோன்ற சட்டவிரோதமாக நியமனங்களை மேற்கொள்கின்றன.

பல்கலைக்கழகங்களின் இது போன்ற செயல்களால், அனைத்து தகுதிகளும் உள்ள நபர்கள், பதவியை பெற முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எதிர் மனுதாரரான கௌதமன் சட்டவிரோதமாகப் பணியைப் பெற்று, அதன்மூலம் பலன்களை அடைந்தது மட்டுமல்லாமல், ஓய்வுகால பலன்களையும் பெற்றுள்ளார் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் காது கேட்காமல் செயல்பட்டுள்ளது.

எனவே, எதிா்காலத்தில் இது போன்ற சட்டவிரோத நியமனங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறக் கூடாது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன .

பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும், சம வாய்ப்பளித்தும் நடைபெற வேண்டும்.

பதவிக்கான கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக அறிவிப்பு பலகை, இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

ஒருவரது நியமனத்தின் தகுதி குறித்து புகாா் வந்தால், அதுதொடா்பாக 3 மாதத்துக்குள் விசாரித்து முடிவுகளை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும்.

நேர்முகத் தோவு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் விடியோ படம் பிடிக்கவேண்டும்.

தகுதி இல்லாதவா்கள் பணி நியமனம் பெற்றால், அவா்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

ALSO READ:  IPL 2025: வரிசையான தோல்விகளுக்குப் பின் மீண்ட சென்னை அணி!

அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, அவரை அப்பதவிக்கு தேர்வு செய்த தேர்வுக் குழு உறுப்பினா்களிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்க வேண்டும்.

போலி ஆவணங்கள் மற்றும் தவறான தகவலைக் கொடுத்து ஒருவர் பணி பெற்றிருந்தால், அவரை பணி நீக்கம் செய்த பின்னர், அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்காக ஒருவா் மதம் மாறி இருப்பது தெரியவந்தால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் எதிா்மனுதாரர் கௌதமன், நூலக தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி உயா்வு பெற்ற பின்னா் வாங்கிய கூடுதல் ஊதிய தொகையை, அவரிடம் இருந்து பல்கலைக்கழகம் வசூலிக்கவேண்டும்.

அவரை அப்பதவிக்கு நியமித்த தேரீவு குழு உறுப்பினா்கள் மீது பாரதியாா் பல்கலைக்கழகம் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories