
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிச.25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை
- பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில் பேட்டி
- மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை
- பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை – அமைச்சர்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாட்களுக்கு சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ் நிகழ்வை ஒட்டி அரசு சார்பில் விடப்படும் விடுமுறை இந்த முறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. காரணம் சனிக்கிழமை கூட விடுமுறை விட வாய்ப்பில்லை என்று குறுகிய காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருந்தனர். எனவே ஆசிரியர்கள் பலர், இந்த முறை பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கால விடுமுறை விட மாட்டார்கள் என்று கூறிக் கொண்டிருந்தனர்…
ஆனால் கிறிஸ்துமசுக்காவது… விடுமுறை விடாமல் இருப்பதாவது..?! இந்த அரசே கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சையில் வந்த விடியல் அரசு ஆயிற்றே… என்று சமூக தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அதன்படி இன்று கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் சிறுபான்மை கோட்டாவில் அரசு உதவி பெறும் கிறிஸ்துவ நிர்வாகத்தில் இயங்கும் சாப்டர் பள்ளிக் கட்டடம் இடிந்து, மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த பள்ளியை அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மதிய இடைவேளையின்போது மாணவர்கள் அனைவரும் வெளியே ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. என்றார்.